12 செப்டம்பர், 2011

பரமக்குடியில் கலவரம் : துப்பாகிச்சூடு, 6 பேர் பலி

பரமக்குடியில் செப்டம்பர் 11 ம் தேதி இமானுவேல் நினைவுதின அஞ்சலி நடப்பது வழக்கம் , அதேபோல் இவ்வாண்டு அஞ்சலிக்கு தமிழகத்தின்
பல்வேறு பகுதியிலிருந்தும் வந்தனர் . இதற்கு தூத்துக்குடியிலிருந்து பரமக்குடிக்கு வர முயன்ற தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர்
ஜான் பாண்டியன் வள்ளனாடு அருகே காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார் , இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் பரமக்குடி ஐந்துமுனையில்
சாலை மறியலில் ஈடுபட்டனர் . சம்பவ இடத்திற்கு வந்த சென்னை அடையாறு துணை ஆணையர் செந்தில்வேலன் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்தை
நடத்தினார் , இதில் தல்லுமுல்லு ஏற்படவே கூட்டத்தை கட்டுபடுத்த காவலர்கள் தடியடி நடத்தினர், நிலைமை கட்டுக்கடங்காமல் செல்லவே துப்பாக்கிச்சூடு
நடத்தினர் , இதில் 6 பேர் பலியாயினர் , கலவரத்தில் தீயனைப்பு வாகனம் , காவல்துறை வாகனம் உட்பட பல வாகனங்களுக்கு  தீயிட்டனர் .இதைத் தொடர்ந்து
பரமக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்து, இப்பகுதி முழுவதும் பதற்றம் நீடிக்கிறது.







3 கருத்துகள்:

nisanth சொன்னது…

No Reason for arrest him.

nisanth சொன்னது…

why police arrest him. what reason. The problem was start by full and fully police side.

ஆசிரியர் சொன்னது…

தங்கள் கருத்துரைக்கு நன்றி, தொடர்ந்து "பரமக்குடி செய்திகள்" வலைத்தளத்திற்கு ஆதரவளிக்குமாறு வேண்டுகிறோம்
--ஆசிரியர் குழு--