5 மார்ச், 2010

என்று தனியும் இந்த சாமியார் மோகம்

தற்போது தமிழகத்தை பரபரபாக்கிய நிகழ்வு சுவாமி நித்யானந்த லீலைகள்.
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பான்மையான மக்களிடம் பல்வேறு பிரச்சனைகள், ஏக்கங்கள், ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புகள் இருக்கின்றனஅதனால் ஏற்படும் மனஅழுத்தம் போதை பொருட்கள் அல்லது சாமியாரின் அருள்வாக்கால் சரியாகும் என அழுத்தமாக நம்புகின்றனர், இவ்வாறு சாமியார்களைத் தேடித்திரியும் ஆசாமிகளை சாமிகள் என்று வழக்கில்கூறப்படும் சாமியார்கள் தியானம், யோகா, என்று வலை வீசுகின்றனர்.உடலுக்கு கேடு ஏற்படின் மருத்துவரைத் தேடிச்செல்லும் நாம் கோபம், பயம்,எதிர்மறை எண்ணங்கள், மன அழுத்தம் , போன்ற மன நோய்களுக்குமனநல மருத்துவரையோ உளவியல் ஆலோசகர்களையோ தேடிச்செல்வதில்லைமாறாக சாமியார்களைத் தேடிச்செல்கிறோம் . பெரும்பாலும் சினிமா நடிகைகள் இதில் சிக்குகின்றனர் , காரணம் சினிமா,சின்னத்திரை நடிகைகளுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும், பத்திரிகைகள் சாமியார்களை ஹீரோவாக சித்தரிப்பதைப் பார்த்து சாமியார்களை நாடுகின்றனர்,சாமியாரோ சிக்கியது மீன் என்று கொக்கி போட்டு விடுகின்றனர் , பொதுவாக நாம் அறிந்து கொள்ள வேண்டியதுதியானம் , யோகா மனித குலத்திற்கு கிடைத்த வரம் .அது மதத்திற்கு அப்பாற்பட்டது யாராக இருந்தாலும்தியானம் மூலம் மனதை ஒருமுகப்படுத்தலாம் , யாராக இருந்தாலும் யோகா கற்றுக்கொள்ளலாம் . தியானம் யோகாஇவ்விரண்டும் கூர்மையான கத்தி போன்றது முறைப்படி ஒரு நல்ல குருவிடம் கற்றுக் கொள்ள வேண்டும். இதற்காக நல்ல குருவை தேடினால் பயனளிக்கும் , சாமியாரைத் தேடினால் கேடளிக்கும் .

கருத்துகள் இல்லை: